உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தமிழ் மக்களின் ஆணையை மீறினார்; சிறீதரன் பதவி விலக வேண்டும் – தயாசிறி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

அரசமைப்புக் கவுன்ஸிலில் சிறுபான்மைக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ் மக்களின் ஆணையை மீறி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஆதரவளித்து வருகிறார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.

அரசமைப்புக் கவுன்ஸிலின் சுயாதீனத் தன்மையைப் பேண வேண்டிய நிலையில், சிறீதரன் அரசாங்கத்தின் விருப்பங்களுக்கு இணங்கச் செயற்படுவதாகவும், சிவில் நிர்வாகப் பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமிக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.மேலும், பூநகரி சூரிய சக்தி மின் திட்டம் தொடர்பில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை மையமாகக் கொண்ட நிதி முறைகேடுகள் குறித்து சந்தேகம் வெளியிட்ட தயாசிறி, அந்த விவகாரத்தில் ‘சாரங்கன்’ என்ற நபரின் ஊடாக கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றதாகவும் குற்றம்சாட்டினார்.

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நியமனம் உள்ளிட்ட முக்கிய சந்தர்ப்பங்களில் எட்டு முறை அரசாங்கத்துக்கு ஆதரவாக சிறீதரன் வாக்களித்துள்ளதாகத் தெரிவித்த தயாசிறி ஜயசேகர, அவர் அரசமைப்புக் கவுன்ஸிலில் தொடர்வதற்கு தார்மீக உரிமை இல்லை எனக் கூறி, உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

56 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

55 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

27 0 0