உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
16 பார்வைகள்

சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,
சமூக வலைத்தளங்களில் அவ்வாறான செய்திகள் வெளியான போதிலும், சட்டமா அதிபரை நீக்குவது குறித்து அமைச்சரவையில் எந்தவொரு கலந்துரையாடலும் நடைபெறவில்லை. சமூக வலைத்தளங்களில் சிலர் சட்டமா அதிபரைப் பாதுகாக்க வேண்டும் என கருத்து வெளியிட்டு வருகின்றனர், இன்னும் சிலர் அவரை நீக்க வேண்டும் எனப் பதிவிடுகின்றனர்.

சட்டமா அதிபரை மாத்திரமன்றி, நீதி அமைச்சரையும் கூட வீட்டுக்கு அனுப்புமாறு சில சமூக ஊடகப் பதிவுகள் வெளியாகியிருந்தன.

எனக்கு ஒன்றுதான் சொல்ல வேண்டியுள்ளது, நீதி அமைச்சர் பற்றியோ அல்லது வேறு யாராவது பற்றியோ முறைப்பாடுகள் இருந்தால், இந்த நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமானது. முறைப்பாடுகளைச் செய்யலாம்.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் விடயங்களுக்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

சட்டமா அதிபரை நீக்குவது குறித்தோ அல்லது அவருக்கு எதிரான குற்றப் பிரேரணை குறித்தோ அமைச்சரவைக்குள் எவ்வித கலந்துரையாடலும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

53 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

59 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

26 0 0