உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கற்பாறை தொடர்பில் வெளியான தகவல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

கண்டி, கலஹா பகுதியிலுள்ள கோவிலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட மர்மக்கல், சந்தை மதிப்பில்லாத சாதாரண லேப்ரடோரைட் வகையை சேர்ந்தவை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தக் கல் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்ட அதிகாரிகள், இது உயர்தர வணிக அல்லது சந்தை மதிப்பைக் கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

இது லேப்ரடோரசென்ஸ் என அழைக்கப்படுகிறது. பொதுவாக நீல நிறத்தை கொண்டுள்ள இது, மற்றொரு பாறைக்குள் பொதிந்துள்ள சிறிய அளவிலான லேப்ரடோரைட் கல் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது பெல்ட்ஸ்பார் வகையை சேர்ந்த ஒரு கனிமமாகும். இதன் தனித்துவமான கனிம குணாதிசயங்களை எளிதாகக் கண்டறிய முடியும்.

இந்தக் கல்லின் மீது ஒளி விழும்போது ஏற்படும் வானவில் போன்ற காட்சி தரும் தோற்றத்தை கொண்டுள்ளது. இத்தகைய தோற்றத்திற்காகவே இது பிரபலமாக அறியப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

53 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

59 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

26 0 0