உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

அபிஷேக் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தில் 48 ஓட்டத்தால் வீழ்ந்தது நியூஸிலாந்து!

23 பார்வைகள்

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் தொடக்க ஆட்டத்தில் புதன்கிழமை (21) இந்தியா நியூசிலாந்தை 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.போட்டியில் அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 84 ஓட்டங்களை எடுத்தார்.

உலகின் நம்பர் 1 டி:20 துடுப்பாட்ட வீரரான அபிஷேக் சர்மா எட்டு சிக்ஸர்கள் மற்றும் ஐந்து பவுண்டரிகள் விளாச, இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 238 ஓட்டங்களை எடுத்தது.

இது இந்திய அணியின் நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது அதிகபட்ச டி:20 ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.அதேநேரம், 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக, நாக்பூர்

மைதானத்தில் இந்தியா டி:20 போட்டிகளில் இரண்டாவது முறையாக 200க்கும் மேற்பட்ட ஓட்ட இலக்கினை எட்டிய சந்தர்ப்பமாகும் இது.அபிஷேக் சர்மாவைத் தவிர, இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 32 ஓட்டங்களை எடுத்தார், ரிங்கு சிங் 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களை எடுத்தார்.

பின்னர் வலுவான ஓட்ட இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்களை மாத்திரம் எடுக்க முடிந்தது.நியூஸிலாந்து அணி சார்பில் அதிகபடியாக க்ளென் பிலிப்ஸ் 40 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக 78 ஓட்டங்களை எடுத்தார்.போட்டியின் ஆட்டநாயகனாக அபிஷேக் சர்மா தெரிவானார்.

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட டி:20 தொடரில் இந்திய அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.வெள்ளிக்கிழமை ராய்ப்பூரில் இரண்டாவது டி20 போட்டி நடைபெறும்.பெப்ரவரி 7 ஆம் திகதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கும் டி20 உலகக் கிண்ணத்துக்கான ஆயத்தமாக இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0