உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மன்னார் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு; ஆறு உறுப்பினர்கள் வெளிநடப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றையதினம் திங்கட்கிழமை (19) இடம்பெற்ற போது இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் உட்பட ஆறு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் என்ற வகையில் கடந்த ஏழு சபை அமர்வுகளில் தங்களால் முன்வைக்கப்பட்ட எந்த ஒரு அபிவிருத்தி செயல்பாடுகளையும் தவிசாளர் செயல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

இதேவேளை செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், பூட்டிய அறையில் அமர்வு இடம்பெற்றுள்ளது.

வெளி நடப்பு செய்த உறுப்பினர்கள் தெரிவிக்கையில்,
சில ஒதுக்கீடுகளும் பாகுபாடு அளவில் செயல்படுத்தப்படுவதாகவும், கிராமங்கள் தோறும் வழங்கப்பட்ட மின்குமிழ்கள் சபை உறுப்பினர்களுக்கு 10 அல்லது 15 என்றும், தவிசாளர் 61 மின்குமிழ்கள் தமது தொகுதியில் பொருத்தியதாகவும், கடந்த புயல் அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பிரதேச சபைகளுக்கான அரசாங்க நிதி ஒதுக்கீடு மன்னார் பிரதேச சபைக்கு கிடைக்காமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பிரதேச சபை பகுதிக்குள் பல்வேறு அனர்த்த சம்பவங்கள் இடம்பெற்றிருந்த போதும் அரச நிதியை பெற்றுக்கொள்ள சேதங்கள் குறித்த கோரிக்கை வைக்கப்படாத காரணத்தினால் நீதி பெறப்படவில்லை
என குற்றம் சுமத்தியுள்ளனர்.

அரசமட்ட பொதுக்கூட்டங்களுக்கு தவிசாளர் செல்வதில்லை என்பதும் பாகுபாட்டுடன் செயல்படுவதும் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த மன்னார் பிரதேச சபையில் தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் உட்பட மொத்தம் 22 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 8 ஆவது அமர்வில் 17 உறுப்பினர்கள் மட்டுமே சமூகம் அளித்திருந்ததாகவும், அமர்வில் இருந்து தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் 5 மற்றும் சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் ஒன்றும் 6 உறுப்பினர்கள் தவிசாளரின் அதிருப்தியான நடவடிக்கை குறித்து வெளிநடப்பு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஏனைய மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் இவ்வாறான அதிருப்தியின் காரணமாக இருந்து வருவதாகவும், கட்சி ரீதியாக குறித்த உறுப்பினர்களால் மீறி செயல்பட முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0