உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கரூர் விவகாரம் : 2 ஆவது முறையாக விசாரணைக்காக முன்னிலையான த.வெ.க தலைவர்..!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்த விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.குறித்த சம்பவம் தொடர்பில் பலரிடம் விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 12 ஆம் திகதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் குறித்து சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையின் போது சுமார் 100இற்கும் அதிகமான கேள்விகள் விஜய்யிடம் கேட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.முதல்கட்ட விசாரணைகள் முடிந்த நிலையில் மீண்டும் அவரை இன்று(19) டெல்லியில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் சி.பி.ஐ. விசாரணைக்காக 2ஆவது முறையாக த.வெ.க தலைவர் விஜய் நேற்று மாலை 4 மணிக்குத் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.இந்த நிலையில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக விஜய் இன்று மீண்டும் முன்னிலையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

58 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0