உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்குப் பாதுகாப்பு.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.குடியரசு தினம் வரும் 26 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.

இது வரும் 30 ஆம் திகதி வரை அமலில் இருக்கும். குறிப்பாக, 24, 25, 26 ஆகிய 3 நாள்களும் உச்சகட்டபாதுகாப்பாக 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமுல்படுத்தப்பட உள்ளது.விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை, பாதுகாப்பு படையினர் பிரதான நுழைவு வாயில் பகுதியிலேயே நிறுத்தி மோப்ப நாய் உதவியுடன் சோதனையிடுகின்றனர். தவிர, மெட்டல் டிடெக்டர்கள் மூலம் வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை செய்கின்றனர். விமான நிலைய வளாகம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

வாகன நிறுத்தப் பகுதியில் நீண்டநேரமாக நிற்கும் கார்கள், பைக்குகள் போன்ற வாகனங்களை வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை செய்கின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், மோப்ப நாய்களுடன், விமான நிலையத்தின் அனைத்து பகுதிகள் மற்றும் விமானங்கள் நிற்கும் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதி, பார்சல் ஏற்றும்பகுதிகளிலும் கூடுதல் பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பயணிகளுக்கு வழக்கமாக நடைபெறும் சோதனை மட்டுமின்றி, விமானத்தில் ஏறும்போது, மேலும் ஒரு முறைபாதுகாப்பு சோதனை நடத்தப்படுகிறது.இதனால், உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரம் முன்னதாகவும் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

58 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0