உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் சாதனை படைத்த நியூஸிலாந்து..!

22 பார்வைகள்

இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நேற்று (18) நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியது. இந்திய மண்ணில் சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து ராஜ்கோட்டில் நடை பெற்ற 2ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.இதனையடுத்து தொடரின் மூன்றாவது போட்டி இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, ஆரம்பத்தில் தடுமாறியது. எனினும் டாரில் மிட்செல் (137) மற்றும் கிளென் பிலிப்ஸ் (106) ஆகிய இருவரின் அதிரடி சதங்கள் அணியைப் ஸ்கோரை உயர்த்தின. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 337 ஓட்டங்கள் குவித்தது. இந்தியத் தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.338 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கிப் பதிலடி கொடுத்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 71 ஓட்டங்களுக்கே 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறிய நிலையில், விராட் கோலி நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடினார்.

அவர் 108 பந்துகளில் 124 ஓட்டங்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு நம்பிக்கையளித்தார். அவருக்குத் துணையாக நிதிஷ் குமார் ரெட்டி (53) மற்றும் ஹர்ஷித் ராணா (52) ஆகியோர் அரைசதம் அடித்து அதிரடி காட்டினர். ஆனால், கோலியின் விக்கெட்டுக்குப் பிறகு இந்திய அணியின் பேட்டிங் வரிசை சரிந்தது. இறுதியில் 46 ஓவர்களில் இந்திய அணி 296 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.நியூசிலாந்து தரப்பில் ஜாக் ஃபால்க்ஸ் மற்றும் கிறிஸ்டியன் கிளார்க் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியைத் தடுத்தனர்.

நியூசிலாந்து வீரர்களின் சிறப்பான பீல்டிங் இந்திய வீரர்களைத் திணறடித்தது. விராட் கோலியின் சதம் இரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தாலும், அணியின் தோல்வி அவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு சொந்த மண்ணில் இந்தியா சந்திக்கும் முதல் ஒருநாள் தொடர் தோல்வி இதுவாகும். 1988ஆம் ஆண்டுக்குப் பிறகு (37 ஆண்டுகள்) இந்திய மண்ணில் நியூசிலாந்து பெறும் முதல் இருதரப்பு ஒருநாள் தொடர் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0