உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை இந்திய பிரதமர் ஆரம்பித்துவைத்தார்!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

மேற்கு பங்களத்தேஷின் ஹவுரா, அசாமின் குவஹாத்தி இடையிலான, ‘ஸ்லீப்பர்’ எனப்படும், படுக்கை வசதியுடன் கூடிய முதல் வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆரம்பித்து வைத்தார்.நாடு முழுதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், 170க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பகல் நேரங்களில் மட்டுமே இயக்கப்படும் இந்த ரயிலுக்கு, பயணியர் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.இதையடுத்து, ‘ஸ்லீப்பர்’ எனப்படும் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கைகள் குவிந்தன.இதை ஏற்ற மத்திய அரசு, படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை தயாரித்தன.

மேற்கு பங்களாதேஷ் மற்றும் வடகிழக்கு மாநிலமான அசாம் இடையே, படுக்கை வசதியுடன் கூடிய முதல் வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, இதற்கான சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், மேற்கு பங்களாதேஷில் மால்டா நகர் ரயில் நிலையத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இங்குள்ள ஹவுரா மற்றும் அசாமின் குவஹாத்தி இடையிலான ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார்.

முன்னதாக, ரயிலில் ஏறி ஆய்வு செய்த பிரதமர் மோடி, ரயில் ஓட்டுநர் மற்றும் அதில் பயணித்த மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.பின், மறுமார்க்கநிகழ்நிலை ‘ வாயிலாக ஆரம்பித்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, மேற்கு பங்களாதேஷில் நியூ ஜல்பைகுரி – நாகர்கோவில், நியூ ஜல்பைகுரி – திருச்சி, அலிபுர்துவார் – பெங்களூரு, அலிபுர்துவார் – மும்பை இடையிலான நான்கு அம்ரித் பாரத் ரயில்களையும் பிரதமர் ஆரம்பித்து வைத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

58 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0