உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

உறை பனி ஏரியில் சிக்கி உயிரிழந்த சுற்றுலாப் பயணி!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

அருணாச்சல் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் 13,700 அடி உயரத்தில் அமைந்துள்ள சேலா ஏரியின் உறைந்த நீரில் தவறி விழுந்ததில் கேரளாவைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி மூழ்கி உயிரிழந்துடன் மற்றொரு பயணி காணாமல் போயுள்ளார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 26 வயதுடைய டினு மற்றும் காணாமல் போனவர் 24 வயதுடைய மகாதேவ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.குறித்த நபர்கள் குவஹாத்தி வழியாக வந்த ஏழு பேர் கொண்ட சுற்றுலா குழுவைச் சேர்ந்தவர்கள்.

சுற்றுலாப் பயணிகள் உறைந்த ஏரியில் காலடி வைக்கும் போது பனிக்கட்டி விரிசலடைவதால் இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஏரியில் ஒருவர் மூழ்கத் தொடங்கிய போது, டினு மற்றும் மகாதேவ் அவரை மீட்க முயன்றனர், ஆனால் இருவரும் பனிக்கட்டி நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மூன்றாவது பயணி பாதுகாப்பாக வெளியேறியுள்ளார்.பேரிடர் மீட்புப் படை மற்றும் மத்தியப் படைகள் இணைந்து மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சேலா ஏரி மற்றும் சுற்றுலா தலங்களில் பலகைகள் நிறுவப்பட்டு, உறைந்த நீரில் நடப்பது அல்லது காலடி வைக்கவேண்டாம் என்று சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

58 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0