உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நிதி முறைகேடு; பிரதமர் ஹரிணிக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

கல்வி சீர்திருத்தங்களுக்காக 500 மில்லியன் ரூபாய் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சியினரால் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதி தவறாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் தானும், இன்னும் சிலரும் முறைப்பாடளித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் தாக்கல் செய்யப்படும் முறைப்பாடுகள் எப்போதும் இலஞ்சமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் முறைப்பாடளிக்கலாம். அதன்படி, நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை மற்றும் வீணாக்கப்பட்டது குறித்து முறைப்பாடளித்துள்ளோம்.

கல்விக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நிதியை வீணாவதற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய பொறுப்பேற்க வேண்டும்.

மேலும், கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் நியாயமான செயல்முறையைப் பின்பற்றத் தவறிவிட்டது.

“அரசாங்கம் ஒரு வெள்ளை அறிக்கையை அறிமுகப்படுத்தி, அனைத்து பங்குதாரர்களுடனும் ஒரு பரந்த விவாதத்திற்கு உட்படுத்தியிருக்க வேண்டும்,” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (24) கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல்…

22 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

58 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன வைத்தியர் ச*டலமாக மீட்பு.!

காணாமல்போன பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் வைத்திய நிபுணரின் சடலம், மஹியங்கனை – மாபாக்கடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறை ஒன்றின் மீது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

68 0 0
இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

35 0 0