உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ஐந்து நட்சத்திர விருந்தகத்தில் அத்துமீறிய ஊழியர்கள் .!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

இந்தியா ஜெய்ப்பூரிலுள்ள ஐந்து நட்சத்திர விருந்தகத்தில் ஒன்றில், விருந்தினர்கள் தங்கியிருந்த அறைக்குள் ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியைச் சேர்ந்த சந்தைப்படுத்தல் நிபுணரான ஒருவர் தனது குடும்பத்துடன் ஜெய்ப்பூரிலுள்ள ‘ஹயாட்’ (Hyatt) விருந்தகத்தில் தங்கியிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

திங்கட்கிழமை மாலை 6:30 மணியளவில், ஏற்கனவே துப்புரவு செய்யப்பட்ட இவர்களது அறைக்குள், இரண்டு விருந்தக ஊழியர்கள் ‘மாஸ்டர் கீ’ (Master key) மூலம் அனுமதியின்றி நுழைந்துள்ளனர்.அச்சமயம் அறைக்குள் நுழைந்த குறித்த நபரின் 6 வயது மருமகள், அடையாளம் தெரியாத இருவர் அறைக்குள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் அழுதுகொண்டே வெளியே ஓடிவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த ஊழியர்கள் எவ்வித அடையாள அட்டையும் அணிந்திருக்கவில்லை என பாதிக்கப்பட்டவர் தனது சமூக வலைத்தளத்தில் சாடியுள்ளார்.

“ஒருவேளை அறைக்குள் யாராவது ஆடை மாற்றிக்கொண்டிருந்தாலோ அல்லது குளித்துக்கொண்டிருந்தாலோ நிலைமை என்னவாகியிருக்கும்? எனது மருமகள் தனியாக இருந்திருந்தால் அவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருந்தால் யார் பொறுப்பு?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த விடயம் குறித்து விருந்தகத்தின் பொது மேலாளரிடம் முறையிட்டபோது, “அவர்கள் உள்ளே நுழைந்தால் என்ன?” என அவர் அலட்சியமாகப் பதிலளித்ததாகவும், சிசிடிவி காட்சிகளைத் தர மறுத்துவிட்டதாகவும் ஜான்வி குற்றம் சுமத்தியுள்ளார்.இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து, விருந்தக நிர்வாகத்தின் இத்தகைய பொறுப்பற்ற பதிலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பல பயனர்கள் தமக்கும் இவ்வாறான அனுபவங்கள் ஏனைய விருந்தகங்களில் ஏற்பட்டுள்ளதாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.ஒரு பயனர் குறிப்பிடுகையில், பொதுவாக மாலை வேளைகளில் செய்வதற்கு ஊழியர்கள் வருவது வழக்கம் என்றாலும், முன்னறிவிப்பின்றி நுழைவது தவறு எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் முறைப்பாட்டைத் தொடர்ந்து, ஹயாட் விருந்தகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மார்க் ஹோப்லமாசியனின் (Mark Hoplamazian) குழுவினர் ஜான்வியைத் தொடர்புகொண்டுள்ளனர்.இது குறித்து 72 மணித்தியாலங்களுக்குள் உரிய விசாரணை நடத்தி அறிவிப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

58 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0