உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அரசாங்கம் வீதி விளக்குகளுக்கான மின் கட்டணத்தை நுகர்வோர் தலையில் சுமத்த தீர்மானம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

அதிகாரிகளின் பொறுப்பற்ற நிர்வாகச் சீர்கேடுகளுக்கு நுகர்வோர் ஏன் தண்டப்பணம் செலுத்த வேண்டும்? அரசாங்கம் வீதி விளக்குகளுக்கான மின்கட்டணத்தை நுகர்வோர் தலையில் சுமத்த தீர்மானித்துள்ளதாக மின்சார ஊழியர் சங்க செயலாளர் ரஞ்சன் ஜயலால் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திபில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மின்சார சபையானது தொடர்ச்சியாகத் தவறான தரவுகளை முன்வைத்து மின் கட்டணத்தை அதிகரிக்க முயற்சிக்கிறது.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை மாற்றியமைக்கும் தற்போதைய நடைமுறை தேவையற்ற செலவுகளை உருவாக்குவதாக உள்ளது. இதனை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என மாற்றியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், மின்சார சபையை நான்கு பிரிவுகளாக மறுசீரமைப்பதற்கு முன்னர், மின்சார சபையின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து முறையான கணக்காய்வு செய்யப்பட வேண்டும்.

அத்தோடு, கடந்த காலங்களில் இடம்பெற்ற நிலக்கரி கொள்முதல் உள்ளிட்ட பாரிய ஊழல்கள் குறித்து ஜனாதிபதி ஆணையம் மூலம் விசாரணை நடத்தப்படுவதும் அவசியம்.

நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையிலும் அனல் மின் நிலையங்கள் மூலம் அதிக இலாபம் ஈட்ட அதிகாரிகள் முயற்சிக்கின்றனர்.

அத்தோடு அரசாங்கம் வீதி விளக்குகளுக்கான மின்கட்டணத்தை நுகர்வோர் தலையில் சுமத்த தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த மின் கட்டனக் கொள்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வீதி விளக்குகளைப் பராமரிப்பதும் அதற்கான கட்டணத்தைச் செலுத்துவதும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பாகும்.

பொதுமக்கள் வீடுகளில் உள்ள மின்சாரத்தையே மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பயன்படுத்துகிறார்கள். பல வீடுகளில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டே இருக்கின்றன. ஆனால், வீதி விளக்குகள் பகல் நேரங்களிலும் அணைக்கப்படாமல் எரிவதைக் காண முடிகிறது. இவ்வாறான அதிகாரிகளின் பொறுப்பற்ற நிர்வாகச் சீர்கேடுகளுக்கு நுகர்வோர் ஏன் தண்டப்பணம் செலுத்த வேண்டும்?

தற்போதைய அரசாங்கம் மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்குமாயின் அதற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராக உள்ளோம் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (24) கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல்…

21 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

57 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன வைத்தியர் ச*டலமாக மீட்பு.!

காணாமல்போன பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் வைத்திய நிபுணரின் சடலம், மஹியங்கனை – மாபாக்கடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறை ஒன்றின் மீது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

68 0 0
இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

35 0 0