உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

25 மாவட்டங்களிலும் சாரதி உரிமங்களை ஒன்லைனில் வழங்க நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 25 மாவட்டங்களிலும் சாரதி உரிமங்களை ஒன்லைனில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சேவை தற்போது 11 மாவட்டங்களில் ஒன்லைனில் செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள மாவட்டங்களில் சாரதி உரிமங்களை ஒன்லைனில் வழங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் சாரதி உரிமங்களை ஒன்லைனில் வழங்குவதன் மூலம், ஒரு மாதத்திற்குள் சாரதி உரிமங்களைப் பெற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, சாரதி உரிமங்களை அச்சிடுவதற்காக ஒரு தனியார் நிறுவனத்திற்கு 184 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டது.

இந்தாண்டு 28 மில்லியன் ரூபாய் செலவில் புதிய நிறுவனம் மூலம் சேவையைப் பெறவும், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூலம் அச்சிடும் இயந்திரங்களை வாங்கவும், நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (24) கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல்…

21 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

57 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன வைத்தியர் ச*டலமாக மீட்பு.!

காணாமல்போன பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் வைத்திய நிபுணரின் சடலம், மஹியங்கனை – மாபாக்கடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறை ஒன்றின் மீது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

68 0 0
இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

35 0 0