உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இளையோர் உலகக் கிண்ணம்: இலங்கை நாளை களத்தில்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

சிம்பாப்வேயில் நேற்று (15) ஆரம்பமான 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் இலங்கை இளையோர் அணி நாளை (17) தனது முதல் போட்டியில் ஜப்பான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. வின்டெக்கில் நடைபெறும் இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும்.

16 அணிகளுடன் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் இலங்கை இளையோர் அணி ஆரம்ப சுற்றில் ஏ குழுவில் இடம்பெற்றிருப்பதோடு இந்தக் குழுவில் ஜப்பானுடன் அவுஸ்திரேலியா, அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

விமத் தின்சர தலைமையிலான இலங்கை இளையோர் அணி 2025 இளையோர் ஆசிய கிண்ணத்தில் அறையிறுதி வரை முன்னேறி அதில் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தது. எனினும் அந்தப் போட்டியில் பெற்ற அனுபவத்துடனேயே உலகக் கிண்ணத்தில் பங்கேற்றுள்ளது. உலகக் கிண்ணத்திற்கு முன்னர் நடைபெற்ற இரு பயிற்சிப் போட்டிகளிலும் வெற்றியீட்டிய உற்சாத்துடனேயே இலங்கை அணி நாளை, முதல் போட்டியில் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெறும் ஆரம்ப சுற்றில் போட்டியிடுவதோடு ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் சுப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் ஆறு அணிகள் கொண்ட இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும்.இளையோர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி பெப்ரவரி 6 ஆம் திகதி ஹராரேவில் நடைபெறவுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0