உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பிளவுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறுவோம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
14 பார்வைகள்

“உலகெங்கும் வாழும் இந்து மக்கள் தங்கள் அறுவடைக்கு பங்களிக்கும் சூரியன், விவசாயிகள் மற்றும் பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தைப்பொங்கலைக் கொண்டாடுகின்றனர். அறுவடைக்கு உதவும் சூரியனுக்கு, விவசாயிகளுக்கு, பசுக்களுக்கு நன்றி செலுத்தும் தைபொங்கல் பண்டிகையில் நாம் அனைவரும் ஒன்றுபடுவதை காண்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இது இயற்கையோடு இணைந்த பண்பாட்டையும் பிரதிபலிப்பதாக அமைகின்றது. தைப்பொங்கல் பண்டிகை மக்களின் நன்றியுணர்வு கலாச்சாரத்தை வளர்க்கும் நம்பிக்கையை ஊக்குவிப்பதோடு, அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்துகின்றது.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தைப்பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“தென்னிந்தியாவை மையமாகக் கொண்டு தொடங்கிய இந்த தைப்பொங்கல் பண்டிகை, சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதன் மூலம் கனமழை பொழிந்து மனித வாழ்விற்கு எண்ணற்ற நன்மைகளைப் பெற்றுத் தரும் என்று மக்கள் நம்புகின்றார்கள்.

சீரான அறுவடையைப் போல சீரான தொடக்கமும் இதன் மூலம் நிகழ்கின்றது.

சூரிய தெய்வத்துக்காக வணங்கி வழிபடுதல், விவசாயத்துக்கு உதவும் அனைத்து செயல்களையும், பசு வளத்தின் மதிப்பைப் பாராட்டுதலும் விவசாயிகளுக்கு நன்றி செலுத்துதலும் இந்தப் பண்டிகை மூலம் எடுத்தியம்பப்படுகின்றது. இதுவே செழிப்பு, வளம், ஒற்றுமை, நட்பு மற்றும் அனைவருக்கும் சௌபாக்கியத்தைக் கொண்டு வருகின்றது.

நமது நாடு கடந்த காலங்களில் நான்கு பெரும் துயர் சம்பங்களை எதிர்கொண்டது. இதனால் மக்களின் வாழ்க்கை நிலைகுலைந்து போயுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நடைமுறை ரீதியிலான சகல நடவடிக்கைகளையும் எடுக்க நாம் தயார்.

செழிப்பு, வளங்கள், நன்மைகள், செல்வம் மற்றும் வருமானம் ஆகியவற்றின் விடியல் சமமாகப் பகிரப்படும் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கின்றோம். இன, மத வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், ஒரு நாடாக அமைதி, ஒற்றுமை, நட்புறவின் மூலம் பொதுவான இலக்கை நோக்கிச் செல்வதை நாம் இலக்காகக் கொள்ள வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (24) கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல்…

21 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

56 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன வைத்தியர் ச*டலமாக மீட்பு.!

காணாமல்போன பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் வைத்திய நிபுணரின் சடலம், மஹியங்கனை – மாபாக்கடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறை ஒன்றின் மீது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

67 0 0
இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

34 0 0