உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் நிதியத்திற்கு ஐக்கிய இராச்சிய பிரஜை ஒருவரினால் நிதி நன்கொடை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
28 பார்வைகள்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் (Rebuilding Sri Lanka) நிதியத்திற்கு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அருகில் வசிக்கும் ரிச்சர்ட் வுட் தம்பதியினர் (Mr and Mrs Richard Wood) 2,000 ஸ்டேர்லிங் பவுண் நன்கொடை வழங்கியுள்ளனர்.

இந்த நன்கொடை பற்றித் தெரிவித்து ரிச்சர்ட் வுட் தம்பதியினர், ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீரவிடம், அதற்கான பற்றுச்சீட்டுடன் கூடிய கடிதத்தை ஒப்படைத்துள்ளனர்.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில் இந்த நிதி நன்கொடை வழங்கப்பட்டதாகவும், கடந்த நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் மூன்று வாரங்கள் இலங்கையில் பயணம் செய்த தமக்கு, நாட்டின் இயற்கை அழகு, சுவையான உணவுகள் மற்றும் மக்களின் உயர்ந்த மனித குணங்கள் குறித்து நல்லெண்ணம் ஏற்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களுக்கு மத்தியிலும், நாடு வலுவாக மீண்டெழுந்து வருவதை காண முடிந்ததாகவும், எதிர்காலத்தில் தமக்கு மிக அண்மையில் உள்ள ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயத்துடன் நல்லுறவைப் பேண எதிர்பார்த்துள்ளதோடு, இலங்கையின் தேசிய தினத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (24) கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல்…

21 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

56 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன வைத்தியர் ச*டலமாக மீட்பு.!

காணாமல்போன பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் வைத்திய நிபுணரின் சடலம், மஹியங்கனை – மாபாக்கடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறை ஒன்றின் மீது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

67 0 0
இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

34 0 0