உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தேச ஒற்றுமை மிக அவசியம் – பொங்கல் வாழ்த்தில் ஜனாதிபதி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

“அண்மையில் நாம் சந்தித்த பேரிடரிலிருந்து ஒரு தேசமாக மீண்டெழும் நம்பிக்கையுடனும் அயராத முயற்சி மற்றும் உறுதியுடனும் இதுவரை இல்லாத அளவிலான பாரிய புனரமைப்பு செயற்பாட்டில் நாம் ஒன்றாகக் கைகோத்துள்ளோம். இந்த வேலைத்திட்டத்துடன் மென்மேலும் வலுவாக கைகோக்க முன்வருமாறு இந்தத் தைப்பொங்கல் திருநாளில் நான் அனைவரிடமும் மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன்.” – இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:-

“உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது.

வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும் கால்நடைகளுக்கும் இயற்கை அன்னைக்கும் நன்றி உணர்வை எடுத்தியம்பும் கொண்டாட்டமாக தைப்பொங்கல் தினம் அமைகின்றது.

செழிப்பு மற்றும் நன்றியுணர்வை அடையாளப்படுத்தும் தைப்பொங்கல் பண்டிகை, சிறந்த விளைச்சலுக்கு நன்றி பாராட்டும் ஒரு நிகழ்வு மாத்திரமன்றி, எதிர்காலத்தில் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதற்கான அழைப்பாகவும் அமைகின்றது.

அண்மையில் நாம் சந்தித்த மிகப்பெரும் இயற்கை அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஒரு தேசமாக மீண்டெழும் நம்பிக்கையுடனும் அயராத முயற்சி மற்றும் உறுதியுடனும் இதுவரை இல்லாத அளவிலான பாரிய புனரமைப்பு செயற்பாட்டில் நாம் ஒன்றாக கைகோத்துள்ளோம். அந்த வேலைத்திட்டத்துடன் மென்மேலும் வலுவாக கைகோக்க முன்வருமாறு சுபீட்சமான எதிர்பார்ப்புடன் இந்தத் தைப்பொங்கல் திருநாளில் நான் அனைவரிடமும் மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், இயற்கையுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய அவசியம் முன்னெப்போதையும் விட அதிகமாக உணரப்படும் இந்த நேரத்தில், இயற்கையுடன் ஆழமாக இணைக்கப்பட்ட தைப்பொங்கல் பண்டிகை நமது வாழ்க்கைக்கும் சமூகத்துக்கும் உயர்வான அர்த்தத்தைச் சேர்க்கின்றது என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன்.

எந்தவொரு இருளுக்கும் பிறகு ஒளி பிறக்கும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம். உறுதியுடனும் ஒற்றுமையுடனும் சவால்களை வென்று ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்புவதற்கான பயணத்துக்கு இவ்வருட தைப்பொங்கல் பண்டிகை சிறந்த ஆசிர்வாதமாக அமைய பிரார்த்திக்கின்றேன்.

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தைப்பொங்கல் தின வாழ்த்துகள்!.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

54 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன வைத்தியர் ச*டலமாக மீட்பு.!

காணாமல்போன பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் வைத்திய நிபுணரின் சடலம், மஹியங்கனை – மாபாக்கடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறை ஒன்றின் மீது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

63 0 0
இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

34 0 0
இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

80 0 0