உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பாதிக்கப்பட்ட 36 ஊடகவியலாளர்களுக்கு மீடியா போரத்தினால் நிவாரண உதவி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
29 பார்வைகள்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 36 ஊடகவியலாளர்களுக்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) அமைப்பினால் நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவ்வமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.அதற்கமைய குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து, ஊடக சமூகத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில், நாடு முழுவதிலுமிருந்தும் பாதிக்கப்பட்ட 36 ஊடகவியலாளர்களுக்கான விரிவான நிவாரணத் திட்டத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் நிறைவு செய்துள்ளது.

அனர்த்தத்தின் பாரதூரமான விளைவுகளை கருத்திற் கொண்டு அங்கத்தவர்களுக்கு மாத்திரமன்றி சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் அனைவரையும் உதவிகள் சென்றடையும் வகையில் இத்திட்டம் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.கொழும்பு, கண்டி, புத்தளம், கம்பஹா, பதுளை, கேகாலை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அனர்த்தத்தினால் வாழ்வாதாரம் மற்றும் உடைமைகளை இழந்த ஊடகவியலாளர்களுக்கே இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

இதற்கமைய துப்புரவு சாதனங்கள், உலருணவுப் பொதிகள் மற்றும் அத்தியாவசிய வீட்டுப் பாவனைப் பொருட்கள், சமையலறை உபகரணங்கள் மற்றும் நிதி உதவிகள் என்பனவழங்கி வைக்கப்பட்டன.இந்த நிவாரணப் பணிக்கு கட்டார் சரிட்டியின் (Qatar Charity) இலங்கை அலுவலகம், ஜே.ஜே. பவுண்டேசன் தலைவர் முஹம்மத் ஹனீப், தொழிலதிபர் பீர்கான் றிஸ்வி ஆகியோர் பங்களிப்புகளை வழங்கியிருந்தனர்.

இதேவேளை பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகள் கொழும்பு, கண்டி, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஊடகவியலாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக விஜயம் செய்து அவர்களுடன் கலந்துரையாடினர்.அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் தமது தொழில்சார் உபகரணங்களை இழந்த இரண்டு ஊடகவியலாளர்களுக்கு, கொழும்பு மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனத்துடன் இணைந்து ஊடக உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியையும் போரம் முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் எம்.பி.எம். பைறூஸ் தெரிவிக்கையில், அனர்த்த பாதிப்புகளுக்கு மத்தியிலும் பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதில் ஊடகவியலாளர்கள் முதன்மையானவர்களாகச் செயற்படுகிறார்கள்.அதேவேளை அவர்களும் பல்வேறுபட்ட இழப்புகளை எதிர்கொள்கிறார்கள். அந்த வகையில் இந்த நெருக்கடியான சூழலில் நிவாரண உதவிகளுக்கு அப்பால் அவர்களது வீடுகளுக்கு நேரில் விஜயம் செய்து ஆறுதல் கூறியதன் மூலம் ஊடகவியலாளர்களுக்கிடையிலான சகோதரத்துவ பிணைப்பை மேலும் வலுப்படுத்த முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தப் பணியை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் பங்களித்த நிறுவனங்கள், தனவந்தர்கள் மற்றும் அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களுக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால், அனர்த்த காலங்களில் ஊடகவியலாளர் சமூகத்தின் நலனை உறுதிப்படுத்துவதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

54 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன வைத்தியர் ச*டலமாக மீட்பு.!

காணாமல்போன பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் வைத்திய நிபுணரின் சடலம், மஹியங்கனை – மாபாக்கடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறை ஒன்றின் மீது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

63 0 0
இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

34 0 0
இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

80 0 0