உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் மையப்புள்ளியாக மாறிய இலங்கை – முக்கிய நபர்கள் அடையாளம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

கண்டி மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டில் போதைப்பொருள் பாவனையானது ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற “நாட்டை ஒன்றாகக் கட்டியெழுப்புவோம்” எனும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய மாநாட்டில் அவர் இதனை வெளிப்படுத்தினார்.

பொலிஸ் சுற்றிவளைப்பு அறிக்கைகளின்படி, போதைப்பொருள் புழக்கம் பெருமளவு அதிகரித்துள்ளது.இதன் பயன்பாடு 5 மடங்கு அதிகரித்து, சுமார் 3 கிலோ 23 கிராம் வரை கைப்பற்றப்பட்டுள்ளது.

கண்டியில் சமீபத்தில் மூன்று பயணிகள் பேருந்துகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது, மூன்று சாரதிகள் மற்றும் இரண்டு நடத்துனர்கள் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.சமூகத்தில் உயர்மட்டத்தில் உள்ள பெண்களும், பாடசாலை மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரிய விடயம் என அவர் எச்சரித்துள்ளார்.

இலங்கை தற்போது சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் மையப்புள்ளியாக மாறியுள்ளதாக லலித் பத்திநாயக்க தெரிவித்தார்.கண்டியில் போதைப்பொருள் விநியோகத்தை முன்னெடுக்கும் முக்கிய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்த வலையமைப்பைக் கட்டுப்படுத்தும் நுவர அக்கா, மாத்தளை அக்கா மற்றும் குடு சைமா போன்ற நபர்களைப் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க முடியாது என்றும், ஒட்டுமொத்த சமூகமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

54 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன வைத்தியர் ச*டலமாக மீட்பு.!

காணாமல்போன பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் வைத்திய நிபுணரின் சடலம், மஹியங்கனை – மாபாக்கடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறை ஒன்றின் மீது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

63 0 0
இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

34 0 0
இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

80 0 0