உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மஸ்கெலியா பிரதேச சபையின் ஊடாக 17 இலட்சம் ரூபாய் செலவில் வீதி விளக்குகள் பொருத்த நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
31 பார்வைகள்

மஸ்கெலியா பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் 17 உறுப்பினர்களுக்கும் 17 இலட்சம் ரூபாய் செலவில் வீதி விளக்குகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபைத் தலைவர் கந்தையா ராஜ்குமார் நேற்று (13) இடம்பெற்ற மாதாந்த அமர்வில் தலைமை வகித்துப் பேசும்போது தெரிவித்தார்.

தலைவர் உட்பட 15 உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மஸ்கெலியா பிரதேச சபையில் உள்ள 10 வட்டாரங்களில் 17 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்தில் ஆதரவாக வாக்களித்தவர்கள். வீதிகளுக்கு விளக்குகளைப் பொருத்தி பொது மக்களின் நலன்கருதி வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் 17 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. உறுப்புகளின் ஏகோபித்த வேண்டுகோளுக்கு ஒவ்வொரு உறுப்பினருக்கும் 12 வீதி விளக்குகள் வீதம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை விரைவில் பொருத்தி மக்கள் பயன் பெற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

மஸ்கெலியா பிரதேச வரலாற்றில் இது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்.

எமது பிரதேச சபைக்கு உட்பட்ட மறே வட்டாரத்தில் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதியும், முக்கா வட்டாரத்துக்கு பெப்ரவரி 27ஆம் தேதியும் இலவச ஆயுர்வேத நடமாடும் சேவையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனைய வட்டாரங்களுக்கும் விரைவில் நடத்தப்படும்.

எமது வட்டார உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எமது பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பிலும் விவசாய பயிர்ச்செய்கையிலும் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழிகாட்டி ஆலோசனைகளை வழங்கும் வகையில் தகுதி வாய்ந்த அதிகாரிகளை நியமிக்கப்பட்டார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுமார் 24.8 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு பணப் பரிமாற்றம் தொடர்பில் சந்தேகநபர் கைது.!

தந்தி பரிமாற்றங்கள் (TT) மூலம் வெளிநாட்டுக் கணக்குகளுக்கு சுமார் 24.8 பில்லியன் ரூபாய்க்கு இணையான வெளிநாட்டு நாணயங்களை மாற்றிய குற்றச்சாட்டின் பேரில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்…

93 0 0
இலங்கை செய்திகள்

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் மேலும் இருவர் பணிநீக்கம்.!

நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி தொடர்பாக, நுவரெலியா மாவட்ட நோர்வூட் பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிய இளைஞர் மன்றத்தில் பணியாற்றிய…

87 0 0
இலங்கை செய்திகள்

கச்சாய்க் குளத்தை புனரமைப்பது தொடர்பாக விவசாயிகளுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி.!

அதிகரித்த வெப்பம் காரணமாக கச்சாய்க் குளத்தின் நீர்மட்டம் வற்றியுள்ளதால், அப் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குளத்தை…

92 0 0
இலங்கை செய்திகள்

இரவு நேர வழிப்பறியாக மாறிவரும் ஹட்டன் நகரின் முச்சக்கரவண்டி வாடகை.!

ஹட்டன் நகருக்கு இரவு நேரங்களில் தலைநகர் கொழும்பு, கண்டி மற்றும் நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பயணிகளிடம் இரவு 9 மணிக்குப் பின்னர் முச்சக்கரவண்டிகளில்…

75 0 0