உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இந்தியாவிற்கு வர பங்களாதேஸ் தொடர்ந்தும் மறுப்பு.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

இந்தியா மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான தற்போதைய கிரிக்கெட் மோதல் தொடர்கிறது.இதன்படி டி20 உலகக்கிண்ண போட்டிக்காக இந்தியாவிற்கு வர பங்களாதேஸ் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இந்தியாவிற்கு பயணம் செய்யப் போவதில்லை என்ற தனது முடிவில் பிடிவாதமாக இருப்பதாக பங்களாதேஸ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

எனவே தமது போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே இலங்கை உட்பட்ட நாடுகளுக்கு மாற்ற வேண்டும் என அந்த நாட்டின் கிரிக்கட் சபை கோரிக்கை விடுத்துள்ளது.இந்த நிலையில் உலகக் கிண்ண அட்டவணை ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்டதால், இப்போது மாற்ற முடியாது என்று ஐசிசி கூறினாலும், பங்களாதேஸ் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

போட்டிகளின் அட்டவணையின்படி, பங்களாதேஸ் அணி, கொல்கத்தாவில் 3 போட்டிகளிலும், மும்பையில் 1 போட்டியிலும் விளையாட வேண்டும். முன்னதாக, பங்களாதேஸில் இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை காரணம் காட்டி, ஐபிஎல்லியின் கொல்கத்தா அணியில் இருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தே, பங்களாதேஸ் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இந்த இந்திய மறுப்பை வெளியிட்டு வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

58 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0