உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சிவில் பாதுகாப்புத் திணைக்கள அணியுடன் டயமன்ட் ரைட் களத்தில்.!

23 பார்வைகள்

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் அச்சு ஊடகம் மற்றும் லேக் ஹவுஸ் டிஜிட்டல் ஊடக அனுசரணையில், விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் கமகேவின் ஆலோசனைக்கு அமைய, விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் சைக்கிளோட்ட நடுவர்கள் சங்கம் இணைந்து நடத்தும் ‘லங்கா ரைட்’ சைக்கிள் சவாரி ஜனவரி 16 ஆம் திகதி காலை 9 மணிக்கு கொழும்பு, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்னால் ஆரம்பமாகவுள்ளது.

‘லங்கா ரைட்’ சைக்கிளோட்டப் போட்டியின் முதல் தினத்தில் கண்டி சென்று, இரண்டாவது தினத்தில் அநுராபுரத்தில் பூர்த்தி செய்யப்படுவதோடு இறுதி நாளான டிசம்பர் 18 ஆம் திகதி புத்தளம் வீதி ஊடாக டொரின்டன் பிளேஸ் சுதந்திர சதுக்கத்திற்கு அருகே நிறைவடையவுள்ளது.ராஜகிரிய பண்டாரநாயக்க டன்கன் அமரசிங்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட டயமன்ட் ரைட் விளையாட்டுக கழகம் லங்கா ரைட் போட்டியில் புதுமுக வீரர்களுக்கு முன்னுரிமை அளித்து பங்கேற்கிறது.

எனினும் 2013 தொடக்கம் தேசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கங்களை வென்ற, எஸ். பத்ம குமார இந்தப் போட்டியில் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது. அவர் 2018 தேசிய சம்பியன்சிப் போட்டியில் இரண்டாம் இடம், 2018 விமானப்படை சவாரியில் ஐந்தாவது இடம் மற்றும் கொழும்பு மாவட்ட சைக்கிளோட்ட சம்பியன்சிப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.

டயமன்ட் ரைட் அணியில் 20 வயதுக்கு உட்பட்ட வீரர்களான சஜித் மதுரங்க மற்றும் ஹிமாஷ ரஷ்மிக்க ஆகியோர் போட்டியிடுவதோடு மெவன் குணரத்ன மற்றும் அனேஷா இத்தவல ஆகியோர் அதிக எதிர்பார்க்கப்படும் வீரர்களாவர்.லங்கா ரைட் சைக்கிள் சவாரியில் போட்டியிடும் மற்றொரு முன்னணி அணியாக சிவில் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளது.

தேசிய மட்டத்தில் பல போட்டிகளில் வெற்றியீட்டிய அனுபவம் மிக்க வீரர்கள் பலர் அந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.2018 விமானப் படை சைக்கிளோட்ட சவாரியில் முதல் இடம்பெற்ற ஈ.ஏ.என். ஷியாமலி மற்றும் அந்தப் போட்டியில் மூன்றாம் இடம்பெற்ற கே.எஸ். குமார ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். எனினும் கே.எஸ். குமார 2019 விமானப் படை சைக்கிளோட்ட சவாரியில் சம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

ஈ.ஏ.என். ஷியாமலி 2019 பொதுநலவாய சைக்கிளோட்டப் போட்டியிலும் இலங்கை சார்பில் பங்கேற்றதோடு 2019 விமானப் படை சைக்கிளோட்ட சவாரியில் இரண்டாவது இடத்தையும் அதன் 2020 போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்றார். தவிர, எம்.எம். பீரிஸ் மற்றும் எம். சலீப் ஆகியோர் அந்த அணியில் இடம் பெற்றிருக்கும் ஏனைய முக்கிய வீரர்களாவர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0