உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ரியல் மேட்ரிட்டை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது பார்சிலோனா.!

35 பார்வைகள்

ஸ்பானிஷ் சூப்பர் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் ரியல் மேட்ரிட் அணியை 3-2 என்ற கோல்கள் கணக்கில் பார்சிலோனா எப்சி அணி வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது.ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் சூப்பர்கிண்ண கால்பந்து தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. இதில் கோபா டெல் ரே மற்றும் லா லிகா கால்பந்து தொடர்களில் வெற்றியாளர்கள் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த அணிகள் பங்குபெற்று வருகின்றன.

அந்த வகையில் 2026ஆம் ஆண்டிற்கான சூப்பர் கிண்ண தொடருக்கான அரையிறுதி போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.அந்த வகையில் 2026ஆம் ஆண்டிற்கான சூப்பர் கிண்ண தொடருக்கான அரையிறுதி போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.இதில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் பார்சிலோனா எப்.சி. அணி 5-0 என்ற கோல்கள் கணக்கில் அத்லெடிக் கிளப் அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்திருந்தது.

அதேசமயம், இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ரியல் மேட்ரிட் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் அத்லெடிகோ மேட்ரிட் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது.இந்த நிலையில் பார்சிலோனா எப்.சி. மற்றும் ரியல் மேட்ரிட் அணிகளுக்கு இடையிலான சூப்பர்கிண்ண இறுதிப் போட்டி 11 நடைபெற்றது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு கோல்களை பதிவு செய்தனர். அதன்படி ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில் பார்சிலோனா அணிக்காக ரஃபின்ஹா முதல் கோலை பதிவு செய்தார்.அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செயற்பட்ட ரியல் மேட்ரிட் அணிக்கு கூடுதல் நேரமான 45+2ஆவது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் கோலடித்து அசத்தினார்.

அதேசமயம் பார்சிலோனா அணியின் ரொபர்ட் லெவண்டோவ்ஸ்கி 45+4ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை முன்னிலைப் படுத்தினார். மேற்கொண்டு ஆட்டத்தின் 45+7ஆவது நிமிடத்தில் கோன்சலோ கார்சியா கோலடித்து மேட்ரிட் அணிக்கு உதவினார்.

இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதனால் இரண்டாம் பாதி ஆட்டத்தில் எந்த அணி முன்னிலை பெற்று வெற்றியைப் பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அபாரமாக செயல்பட்ட பார்சிலோனா அணியின் ரபின்ஹா ஆட்டத்தின் 73ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை முன்னிலை படுத்தினார்.

அதேசமயம் மறுபக்கம் இறுதிவரை போராடிய ரியல் மேட்ரிட் அணியால் எதிரணியின் டிபென்ஸைத் தாண்டி கோல்களை பதிவு செய்ய முடியவில்லை.இதன் காரணமாக ஆட்டநேர முடிவில் பார்சிலோனா எப்.சி. அணி 3-2 என்ற கோல்கள் கணக்கில் ரியல் மேட்ரிட் அணியை வீழ்த்தியதுடன், ஸ்பானிஷ் சூப்பர்கிண்ண தொடரில் சம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தது.அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செயற்பட்ட ரியல் மேட்ரிட் அணிக்கு கூடுதல் நேரமான 45+2ஆவது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் கோலடித்து அசத்தினார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0