உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவுஸ்திரேலிய மகளிர் அணித் தலைவர்!

20 பார்வைகள்

அவுஸ்திரேலிய மகளிர் அணியின் தலைவரும், எட்டு உலகக் கிண்ணப் பட்டங்களை வென்ற அனைத்து காலத்திலும் மிகவும் வெற்றிகரமான வீராங்கனைகளில் ஒருவராக கருதப்படும் அலிசா ஹீலி (Alyssa Healy) ஓய்வு குறித்த தீர்மானத்தை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி-மார்ச் மாதத்தில் இந்தியாவுக்கு எதிரான பல வடிவிலான உள்நாட்டுத் தொடருக்குப் பின்னர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக 35 வயது வீராங்கனை கூறியுள்ளார்.2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவுஸ்திரேலிய மகளிர் அணியின் முழுநேர தலைவராக நியமிக்கப்பட்ட ஹீலி, இந்தியாவுடனான தொடரில் டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்.

ஆனால் மார்ச் 6-9 வரை நடைபெறும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்.அதேநேரம், தனது தொழில் பயணத்தை முடிப்பதற்கு முன்பு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுவார்.15 வருடகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் அனைத்து வடிவிலும் சுமார் 300 போட்டிகளில் விளையாடியுள்ளார்,

7,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை விளாசியுள்ளார் மற்றும் 275 ஆட்டமிழப்புகளை மேற்கொண்டுள்ளார்.அவர் தலைமையில் அவுஸ்திரேலியா இரண்டு முறை சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.2022 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரான 170 ஓட்டங்களை எடுத்தார்.‍மேலும் ஆறு முறை டி20 உலகக் கிண்ணத்தையும் வென்றுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0