உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மீண்டும் தலைதூக்கிய வரதட்சணை கொடுமை ; 23 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

இந்தியாவில் பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் பட்டுல், கணவர் குடும்பத்தினரின் வரதட்சணை தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பட்டுலுக்கும், உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் பர்சியா கிராமத்தைச் சேர்ந்த ரோகித் என்பவருக்கும் கடந்த ஆண்டு மே 8ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பின்னர், பட்டுல் தனது கணவருடன் பர்சியா கிராமத்தில் வசித்து வந்தார்.இந்த நிலையில், திருமணத்திற்கு பின்னரும் கூடுதல் வரதட்சணை கோரி கணவர் ரோகித், அவரது தாயார் சந்திரவதி தேவி, சகோதரி ரூபி தேவி மற்றும் அவரது கணவன் ஆகியோர் பட்டுலுக்கு தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்த தொல்லைகளால் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளான பட்டுல், நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார், பட்டுலின் மாமியார் சந்திரவதி தேவியை கைது செய்துள்ளனர்.மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் கணவர் ரோகித் உட்பட மேலும் மூன்று பேர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை கைது செய்ய பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

58 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0