உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கரூர் வழக்கில் CBI தலைமையகத்தில் விஜய்.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

கரூர் மாவட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் நேரில் முன்னிலையானார்.சுமார் 80-க்கும் மேற்பட்ட கேள்விகளுடன் அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கரூரில் நிகழ்ந்த நடந்த சோகமான உயிரிழப்புகள் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கின் ஒரு பகுதியாக, த.வெ.க. தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு முன்னிலையானார்.சி.பி.ஐ. அதிகாரிகள் நான்கு பேர் கொண்ட குழு, விஜய்யிடம் மட்டும் தனியாக விசாரணையை முன்னெடுத்ததாகத் தெரிகிறது. இந்த விசாரணையின் போது, வழக்குத் தொடர்பாக சுமார் 80க்கும் மேற்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாகத் தகவல் கசிந்துள்ளது.விசாரணை நிறைவடைந்த பின்னர், அவர் ஆதவ் அர்ஜூனாவுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

முதலில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணை தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.இதற்காக அவர் இன்று இரவு டெல்லியில் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும், பொங்கல் திருநாளுக்குப் பிறகு விசாரணைக்கு முன்னிலையாவதாக விஜய் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை சி.பி.ஐ. ஏற்றுக்கொண்டது.

இதன்படி இன்று நடைபெறவிருந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவர் மீண்டும் முன்னிலையாக வேண்டிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

58 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0