உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கிரிக்கட் ஜாம்பவான்கள் களமிறங்கும் ஆசிய லெஜெண்ட்ஸ் லீக் தொடர் ஆரம்பம்!

17 பார்வைகள்

ஆசிய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆசியப் பிராந்தியத்தைச் சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்களைக் கொண்ட பல அணிகள் போட்டியிடும் ஆசிய லெஜெண்ட்ஸ் லீக் (ALL) தொடர் எதிர்வரும் ஜனவரி 19 ஆம் திகதி முதல் பெப்ரவரி 1 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடரின் சிறப்பம்சமாக, இலங்கையின் முன்னாள் ஜாம்பவான்களை உள்ளடக்கிய ‘இலங்கை லயன்ஸ்’ அணி களமிறங்கவுள்ளது.இலங்கை கிரிக்கெட்டின் பொற்காலத்தைச் சேர்ந்த பல நட்சத்திர வீரர்கள் மீண்டும் ஒன்றிணைந்து விளையாடவுள்ளமையினால் இந்த போட்டி குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் போட்டியில் திசர பெரேரா தலைமையிலான குறித்த அணியில், உபுல் தரங்க, அஜந்த மெண்டிஸ், சீக்குகே பிரசன்னா, சாமர கபுகெதர, தனுஷ்க குணதிலக உள்ளிட்ட முன்னாள் இலங்கை வீரர்கள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0