யாழில் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் கைது.!
யாழ்ப்பாணத்தில் இன்று(11) ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அராலி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 30 வயதான இருவரே கைது செய்யப்பட்டனர்.
யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நடத்திய விசேட சோதனையின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து ஐந்து கிராம் மற்றும் 39 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டன.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.