மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்தவர் பலி.!
எல்பிட்டிய ஆதார மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து இன்று (10) காலை விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
கரந்தெனிய, கிரிபெட்டே பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
எல்பிட்டிய ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக டிக்கெட் வாங்கிய ஒரு குடியிருப்பாளர் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.