உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இரண்டு நாள் போராட்டத்தின் பின் வாவியிலிருந்து மீட்கப்பட்ட விமானம்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
62 பார்வைகள்

நுவரெலியா, கிரகரி வாவியில் விபத்திற்குள்ளான நீர் விமானம் (sea plane) பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (09) மாலை 6 மணியளவில் மீட்டெடுக்கப்பட்டது.இலங்கை விமாப்படைக்குச் சொந்தமான அதி உயர் தொழில்நுட்பம் கூடிய பாரந்தூக்கி வாகனங்கள் மூலம் கரைக்கு இழுத்துச் தூக்கி எடுக்கப்பட்டது.

எனினும் மீட்பு பணியின் போதும் விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்திலும் குறித்த விமானம் கடுமையாக சேதம் ஏற்பட்டுள்ளது.சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் நுவரெலியா பொலிஸ் உயிர்காப்பாளர்கள், விமானப்படை அதிகாரிகள் , இராணுவ அதிகாரிகள் மற்றும் கிரகரி வாவி படகு சவாரி வீரர்கள் ஆகியோர் இணைந்து வாவியில் விபத்திற்குள்ளான விமானத்தை பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் மீட்டனர்.

நுவரெலியாவில் தற்போது நிலவி வரும் பனி மற்றும் மோசமான வானிலை காரணமாகவும் , கிரகரி வாவியில் சேறும் சகதியும் தேங்கி உள்ளதால் மீட்பு பணியை மேற்கொள்வதில் சற்று தாமதம் ஏற்பட்டிருந்தது.

விமானம் விபத்திற்குள்ளானதற்கான உரிய காரணம் இதுவரை தெரிய வரவில்லை இதுபற்றி விசாரணை செய்வதற்கு தனிப்பட்ட குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா, கிரகரி வாவியில் நீர் விமானம் (sea plane) ஒன்று புதன்கிழமை (07) ஆம் பிற்பகல் 12.30 மணியளவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் அதிலிருந்த 2 விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

திருப்பெருந்துறையில் திண்மக்கழிவு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க விசேட குழு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழுவின் மூலம் குறித்த பகுதிக்கு…

58 0 0
இலங்கை செய்திகள்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு 3 புதிய பாலங்களுக்கான வாய்ப்பு!

உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் வகையில், ஒவ்வொரு பிரதேச சபைக்கும் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுகீட்டில் மூன்று பாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மஸ்கெலியா பிரதேச…

56 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைக் காக்க பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது…

67 0 0
இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

43 0 0