குறிகாட்டுவான் – நெடுந்தீவு படகு சேவை இன்றும் மூன்றாவது நாளாக நிறுத்தம்!
காலநிலை சீரின்மை காரணமாக குறிகாட்டுவான் – நெடுந்தீவிற்கு இடையிலான படகு போக்குவரத்து சேவைகள் இன்றையதினம் (10/01) சனிக்கிழமை மூன்றாவது நாளாக இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை சீரின்மை காரணமாக கடற்கொந்தளிப்பு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக குறித்த படகு போக்குவரத்து சேவையினை செயற்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்றைய காலநிலை நிலைமையினை கருத்தில் கொண்டே நாளைய தின (11/01) சேவை தொடர்பில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.