உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஸ்டொனிகிளிப் தோட்டத்தில் சிறுநீரக நோயாளிகள் அதிகரிப்பு – 11 பேர் உயிரிழப்பு!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
41 பார்வைகள்

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஸ்டொனிகிளிப் தோட்டத்தில் சிறுநீரக நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதுவரை 11 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக பிரதேச சபை ஊடாக நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும் என கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன் புதன்கிழமை (7) இடம்பெற்ற  சபையின் மாதாந்த அமர்வில் பேசும் போது தெரிவித்தார்.    அவர் மேலும் பேசுகையில்,

    மலையகத்தில் சிறுநீரக நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஸ்டொனிகிளிப் தோட்டத்தில் 11 பேர் இறந்துள்ளதாகவும், இதற்கு அசுத்தமான குடிநீரைப் பருகுவதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. எனவே, பொது சுகாதாரப் பரிசோதகர்களைக் கொண்டு ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்மையில் கூட 28  மற்றும்  35 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. இது சம்பந்தமாக இந்த வட்டாரத்தின் மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் மருத்துவ வைத்திய அதிகாரி (MOH) மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) ஆகியவற்றுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளேன்.

    மேலும் கொட்டகலை அமைதிபுரத்தில் உள்ள பாதை ஒன்று  யாருக்கு சொந்தம் என்பதில் இன முறுகல் ஏற்படக் கூடிய அச்சம் காணப்படுகின்றது. அங்குள்ள பிரதேச வாசிக்கா அல்லது புகையிரத திணைக்களத்துக்கா உரித்தானது  என்பதை அளவீட்டின் மூலம் கண்டறிந்து சுமுகமான நிலையை ஏற்படுத்தி பாதையை சீரமைத்துக் கொடுக்க வேண்டும்.  

    கொட்டகலை நகரில் “தங்கக் கடன் என்ற பெயரில் தனி நபர் ஒருவர் இலட்சக் கணக்கான ரூபாவை மக்களிடமிருந்து மோசடி செய்துள்ளதாகவும்,  நகைகளை மீட்பதற்காக கொடுக்கப்பட்ட இலட்சக் கணக்கான பணத்தோடு குறித்த நபர் தலைமறைவாகிவிட்டதாகவும் இதுவரை 1720 பேரின் நகைகள் அடைவு பிடிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு எதிர்காலத்தில் இத்தகைய விடயங்களுக்கு பிரதேச சபை அனுமதி வழங்கும் போது, சரியான முறையில் பரிசீலனை மேற்கொண்டு வழங்க வேண்டும்.

      கொட்டகலை நகரில் உள்ள மதுபானசாலைகள் காலை நேரத்திலேயே திறக்கப்பட்டு விடுகின்றன. சில நேரங்களில் அடிபிடி சண்டைகள் உட்பட பொது மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதையும் அவதானிக்க முடிகிறது. ஆகவே, கலால் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு  மாலை நேரங்களில் திறப்பதற்கு பிரதேச சபைத் தலைவர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைக் காக்க பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது…

29 0 0
இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

39 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு!

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம்தொடர்பான ஊடக சந்திப்பு கொட்டகலையில் இன்று இடம் பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் பிரிடோ நிறுவனத்தின் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல்…

49 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் முருங்கன் பகுதியில் புதிய விதை விற்பனை நிலையம் ஆரம்பம்!

மன்னார் – முருங்கன் பகுதியில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு, Sennel Agro (Pvt) Ltd நிறுவனத்தின் கீழ் “மாதோட்ட விதைகள்” எனும் புதிய விதை விற்பனை…

44 0 0