உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

2026 இல் 55 ஆயிரம் வீடுகள் நிர்மாணம்! – ஜனாதிபதி அநுர உறுதி!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
44 பார்வைகள்

இலங்கை வரலாற்றில் அரச அனுசரணையின் கீழ் அதிகளவான வீடுகள் நிர்மாணிக்கப்படும் ஆண்டாக 2026 ஆம் ஆண்டு அமையும் ஈன்று  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.“அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலான புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும்.

வீடமைப்பு அதிகார சபையால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட 31 ஆயிரம் வீடுகளுடன் சேர்த்து, இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 55 ஆயிரம் வீடுகள் வரை நிர்மாணிக்கப்படும்.” – என்றும் ஜனாதிபதி கூறினார்.டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை மீண்டும் நிர்மாணிக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக, முற்றிலும் வீடுகளை இழந்து அதே இடத்தில் மீண்டும் கட்டக்கூடிய குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.

அதன்படி, அனுராதபுரம் மாவட்டத்தின் கல்னேவ, பலகல, பலுகஸ்வெவ, இபலோகம மற்றும் திரப்பனை பிரதேச செயலாளர் பிரிவுகளில் முற்றிலுமாக சேதமடைந்த 26 வீடுகளைப் புனரமைப்புக்கான இழப்பீடு நேற்று வழங்கப்பட்டது.

அத்துடன், புதிய வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், இவ்வளவு பாரிய நட்டஈடு வழங்கி மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை கடந்த ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவில்லை.அனர்த்தத்துக்கு முகம் கொடுத்த மக்களுக்கு அவர்கள் முன்பு இருந்ததை விடவும் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றும் ஜனாதிபதி கூறினார்.

அதேபோல், மக்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க வேண்டுமாயின், சிறந்த வருமானம், பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை, ஒரு நல்ல வீடு மற்றும் மன அமைதி ஆகியவை அவசியம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.அந்த 5 விடயங்களையும் நிறைவேற்றுவதற்காக அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைக் காக்க பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது…

56 0 0
இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

39 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு!

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம்தொடர்பான ஊடக சந்திப்பு கொட்டகலையில் இன்று இடம் பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் பிரிடோ நிறுவனத்தின் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல்…

49 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் முருங்கன் பகுதியில் புதிய விதை விற்பனை நிலையம் ஆரம்பம்!

மன்னார் – முருங்கன் பகுதியில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு, Sennel Agro (Pvt) Ltd நிறுவனத்தின் கீழ் “மாதோட்ட விதைகள்” எனும் புதிய விதை விற்பனை…

44 0 0