உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பருத்தித்துறை நவீன சந்தை கட்டடத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
39 பார்வைகள்

பருத்தித்துறை நகரசபைக்கு சொந்தமான நவீன சந்தை கட்டடத் தொகுதியில் நடைபாதையினை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்பட்டு வந்த வியாபார நடவடிக்கைகளை அகற்றுவதற்கு நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் குறித்த நடைமுறையினை மீறும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரின் மத்தியில் அமைந்துள்ள நவீன சந்தை கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களுக்கு முன்பாக அவர்களுக்கு ஒப்பந்தத்தின் பிரகாரம் வரையறுக்கப்பட்ட இடத்திற்கு மேலதிகமான இடத்தை ஆக்கிரமித்து பொருட்கைள பரப்பி வியாபார நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

இதனால் நடைபாதையினை முற்றாகவே பயன்படுத்த முடியாத நிலையில் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.குறிப்பாக வெயில், மழை நேரங்களில் பிரதான வீதியூடாகவே பயணித்து கடைகளுக்கு செல்லும் நிலை காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் கடந்த 01 திகதி முதல் வரையறுக்கப்பட்ட இடத்திற்குள்ளாக பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்துவதற்கு இடையூறு இல்லாத வகையில் வியாபார நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு நவீன சந்தை கட்டடத் தொகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று (08) இரவு குறித்த நடைமுறைகள்பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் நேரில் பார்வையிட்டிருந்தார்.இதன்போது மேற்குறித்த அறிவுறுத்தலை மீறி செயற்பட்டு வந்த சில வர்த்தக நிலையங்கள் செயற்பட்டமை கண்டறியப்பட்டது.

ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டதற்கு அமைவாக செயற்படாவிடில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த நகரசபை தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகரபிதாவினால் நேரடியாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று (09) வெள்ளிக்கிழமை காலை நகரசபை உத்தியோகத்தர்கள் நேரில் பார்வையிட்டு, திங்கட்கிழமை முதல் மேற்குறித்த நடைமுறை இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என குறித்த வர்த்தக நிலையங்களுக்கு இறுதி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைக் காக்க பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது…

4 0 0
இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

39 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு!

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம்தொடர்பான ஊடக சந்திப்பு கொட்டகலையில் இன்று இடம் பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் பிரிடோ நிறுவனத்தின் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல்…

49 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் முருங்கன் பகுதியில் புதிய விதை விற்பனை நிலையம் ஆரம்பம்!

மன்னார் – முருங்கன் பகுதியில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு, Sennel Agro (Pvt) Ltd நிறுவனத்தின் கீழ் “மாதோட்ட விதைகள்” எனும் புதிய விதை விற்பனை…

44 0 0