உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வல்வெட்டித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்களில் “லஞ்ச் சீற்”பயன்பாடு தடை!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
38 பார்வைகள்

வல்வெட்டித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்களில் “லஞ்ச் சீற்” பயன்படுத்த முற்றாக தடை செய்யப்படுவதாகவும் அதனை மீறி செயற்படும் உணவகங்களின் வியாபார உரிமம் இடைநிறுத்தப்படும் எனவும் வல்வெட்டித்துறை நகரசபை அறிவித்துள்ளது.

வல்வெட்டித்துறை நகரபிதா எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வழிகாட்டுதலில் நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்களினது உரிமையாளர்களுக்கான கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சீற் பாவனையை முற்றாகத்தடை செய்யும் முகமாக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொது மண்டபத்தில் இன்றைய தினம் (09) கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

உபதவிசாளர் தலமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சகல உணவு கையாளும் நிலையங்களிலும், திருமண மண்டபங்களிலும், அன்னதான மடங்களிலும் லஞ்சீற் பாவனை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன் அதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வியாபார உரிமம் இடைநிறுத்தப்படும் எனவும் கூறப்பட்டது.

குறித்த நடைமுறை உடனடியாக அமுல்படுத்தப்படுகின்ற போதிலும் வரும் 15 ஆம் திகதி வரை மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் அவகாசம் வழங்கப்படும் எனவும் ஜனவரி 16 முதல் முற்றுமுழதாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லஞ்சீற் பாவனை தடை தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரமும் இதன் போது உணவக உரிமையாளர்களிற்கு விநியோகிக்கப்பட்டது.

இதன்போது 2026 ஆம் ஆண்டிற்கான வியாபார உரிமங்கள் மார்ச் 31 இற்கு முன்னர் அனைவரும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஸ் கலந்து கொண்டு உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

வடக்கு மாகாணத்தில் “லஞ்ச் சீற்” பாவனையை முற்றுமுழுதாக தடை செய்வதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் கடந்த 01 முதல் முதல் பருத்தித்துறை நகரசபை அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

38 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு!

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம்தொடர்பான ஊடக சந்திப்பு கொட்டகலையில் இன்று இடம் பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் பிரிடோ நிறுவனத்தின் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல்…

48 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் முருங்கன் பகுதியில் புதிய விதை விற்பனை நிலையம் ஆரம்பம்!

மன்னார் – முருங்கன் பகுதியில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு, Sennel Agro (Pvt) Ltd நிறுவனத்தின் கீழ் “மாதோட்ட விதைகள்” எனும் புதிய விதை விற்பனை…

43 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கச் சதி!

கிழக்கு மாகாணத்தில், குறிப்பாகக் கல்முனை மாநகரில் ‘பிட்டும் தேங்காய்ப்பூவும்’ போல ஒற்றுமையாக வாழும் தமிழ் – முஸ்லிம் மக்களின் நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, முஸ்லிம்களின் குரல்களை நசுக்குவதற்குச் சில…

60 0 0