உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நாமல் ராஜபக்ச மற்றும் மாலைதீவு தூதுவர் இடையில் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
22 பார்வைகள்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும், இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் மசூத் இமாத் (Masood Imad) கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று காலை பத்தரமுல்லயில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.வர்த்தகம், சுற்றுலாத்துறை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் புதிய வழிகளை ஆராய்வது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக, இளைஞர் வலுவூட்டல் மற்றும் விளையாட்டுத் துறை அபிவிருத்தியில் இரு நாடுகளும் இணைந்து செயற்படக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாமல் ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டினார்.இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதில் இரு நாடுகளினதும் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு அவசியமானது என இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

மாலைதீவு தூதுவர் மசூத் இமாத், இலங்கையுடனான மாலைதீவின் உறவை உயர்வாக மதிப்பதாகத் தெரிவித்தார். அதேவேளை, தெற்காசிய பிராந்தியத்தில் ஒரு நெருங்கிய நட்பு நாடு என்ற ரீதியில் மாலைதீவுக்கு இலங்கை வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு அவர் தனது நன்றியினைத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0