உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நுவரெலியாவில் pickme- க்கு எதிராக போராட்டம்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
20 பார்வைகள்

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் அமைக்கவுள்ள Pick Me அலுவலகத்திற்கு எதிராக நுவரெலியா சாரதி சங்கத்தினர் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.இந்த போராட்டமானது, இன்று(09.01.2026) நுவரெலியாவில் அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. குறித்த போராட்டத்தில் ஈடுப்பட்ட சாரதிகள் கருத்து தெரிவிக்கையில்,

Pick Me செயலியை நிரந்தரமாக அறிமுகம் செய்தால் சுற்றுலா பயணிகளும் மற்றும் பொது மக்களும் அதனை பயன்படுத்த தொடங்கி விடுவார்கள். இதன் காரணமாக நீண்ட காலமாக முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய வாகனங்களில் வாழ்வாதாரமாக கொண்டு ஏற்படுபவர்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படக்கூடும்.மேலும், நுவரெலியா சுற்றுலாவிற்கு ஒரு பிரதான தளமாகும்.

இங்கே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களிடம் Pick Me செயலி மூலம் இரகசியமான முறையில் பணம் பரிமாற்றம் செய்து ஏற்றி செல்கின்றனர்.அத்துடன் கூடிய தூரத்திற்கு, குறைந்தளவு பணத்தை வாங்கிக் கொண்டு பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். இது போன்று செய்தால் காலை முதல் இரவு வரை இந்த தொழிலை நம்பியிருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

Pick Me-ஐ நம்பி எங்களால் வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாது. நுவரெலியா நகரில் அறிமுகம் செய்யவும் இடமளிக்க முடியாது. இதுவே எங்களது கோரிக்கையாகும்” என போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இறுதியில் புதிய அலுவலகம் அமைப்பதற்கு தீர்மானம் செய்த இடத்தில் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0