உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வர்த்தக நிலையத்தில் பாரிய கொள்ளை.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
51 பார்வைகள்

மட்டக்களப்பு செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (09) அதிகாலை பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள பிரபல சில்லறை வர்த்தக நிலையமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

அதிகாலை வேளையில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் மிகத் திட்டமிட்ட முறையில் இக் கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.

வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வழங்கிய தகவலின்படி, சுமார் 45 இலட்சம் ரூபாய் பணம், 5 பவுண் எடையுள்ள தங்க ஆபரணங்கள், கடையில் இருந்த பெறுமதியான விற்பனைப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் என்பன திருடப்படுள்ளன.

திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், தாங்கள் அடையாளம் காணப்படுவதைத் தவிர்ப்பதற்காக, கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களைச் சேதப்படுத்தியதுடன் அவற்றின் காட்சிகளைப் பதிவு செய்யும் கருவிகளையும் (DVR/NVR) கையோடு எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நேரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை சந்தியில் அமைந்துள்ள ஏனைய வர்த்தக நிலையங்கள் மற்றும் வீதிகளில் உள்ள பொதுவான சிசிரிவி கமரா காட்சிகளைப் பயன்படுத்தி கொள்ளையர்களை அடையாளம் காண பொலிஸார் முயற்சித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தனியார் மருத்துவமனைக்குச் செல்ல ஷிரந்தி ராஜபக்சவுக்கு அனுமதி மறுப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை இன்று கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை இடம்பெறாது என சிறைச்சாலை…

27 0 0
இலங்கை செய்திகள்

ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

திருத்தங்களுடன் கூடிய ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.…

73 0 0
இலங்கை செய்திகள்

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கான விதிமுறைகளைத் திருத்த புதிய குழு

சிறையில் உள்ள பௌத்த துறவிகள் தங்கியிருக்கும் விதம் மற்றும் அவர்களைச் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் முறைமைகள் தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகள்…

61 0 0
இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

78 0 0