உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

திருச்சி மருத்துவமனை மீது சிறுநீரக முறைகேடு புகார்!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகளிடம் திருச்சியை சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்களும், இடைத் தரகர்களும் சிறுநீரக முறை கேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க தமிழக அரசு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வட்டிக்கு கடன் வாங்கி, அதை திருப்பிச் செலுத்த முடியாததால், தனது சிறுநீரகத்தை விற்பனை செய்துள்ளார்.

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த இடைத்தரகர்கள் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக மகாராஷ்டிர சிறப்பு புலனாய்வுத் துறையினர் குற்றம்சாட்டினர்.இதுதொடர்பாக திருச்சிக்கு வந்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, தமிழக சுகாதாரத் துறை சிறப்புக் குழு அமைத்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “மருத்துவம் – ஊரக நலத்துறை கூடுதல் இயக்குநர் பிரகலாத் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், கண்காணிப்பு அதிகாரி, நிர்வாக அதிகாரி, இணை இயக்குநர் நிலையில் உள்ள அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். மகாராஷ்டிர சம்பவத்துக்கும், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை அவர்கள் விசாரிப்பார்கள்.

விவசாயிகளை குறிவைத்து இத்தகைய மோசடி நடக்கிறதா என்பதையும் ஆய்வு செய்யவுள்ளனர். அதுதொடர்பான ஆய்வறிக் கையை விரைவில் அக்குழு அரசிடம் சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

58 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0