உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாழடைந்து காணப்பட்ட நிலாவரை கிணறு! முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
41 பார்வைகள்

நிலாவரை ஆழமற்ற கிணற்றுப் பகுதி மிகவும் தூய்மையற்றதாகக் காணப்படுவதாக சமூக வலைத்தளம், ஊடகங்களில் வெளியாகிய விமர்சனத்தினைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையால் விரைவாக துய்மிப்புப் பணிகள் இடம்பெற்றுள்ளன.

காலாகாலமாக பிரதேச சபையினால் நிலாவரை ஆழமற்ற கிணறு உள்ளிட்ட பகுதிகள் சபையின் சொத்தாக பராமரிக்கப்பட்டன.பிரதேச சபையின் நேரடி முகாமைத்துவத்தின் சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் எல்லை மதில்கள் அமைக்கப்பட்டு ஆழமற்ற கிணற்றினைச் சுற்றி பாதுகாப்பு, உலோக வேலிகள், பிரதேசத்தினை அழகுபடுத்தும் மின்குமிழ்கள், பார்வையாளர் இருக்கைகள், நடைபாதைகள் அமைக்கப்பட்டு திறன்பட வலயம் முகாமை செய்யப்பட்டு வந்தன.

இதன் மூலம் தமிழ் மக்களின் வரலாறும் தொன்மையும் எடுத்தியம்பப்பட்டு வந்தது. 2021 ஆம் ஆண்டுக்கும் 2023 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மூன்று தடவைகள் பூசகமான முறையில் இராணுவத்தினருடன் இணைந்து தொல்லியல் திணைக்களம் அத்திவாரம் வெட்டியது.

அந்த முயற்சி பௌத்த சிங்கள பேரினவாத நோக்கில் விகாரை அமைக்கும் முயற்சியென குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், அப்போதும் தவிசாளராக பதவி வகித்த தியாகராஜா நிரோஷ் அவற்றை தடுத்திருந்தார்.இதனையடுத்து அவர் தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்கு இடையூறு விளைவித்தாகத் குற்றச்சாட்டில் தவிசாளர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக வழக்கினை எதிர்கொண்டதுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்குகள் பின்னர் சட்டா அதிபரின் ஆலோசனையில் உள்ளன. பிரதேசத்தில் உள்நுழைபவர்களுக்கான கட்டண அறவீடு தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தினால் தடைகளும் ஏற்படுத்தப்பட்டு வந்தன.

இவ்வாறான காரணங்களினால் சபை பதவியிழந்த பின்பு பிரதேச சபையினால் குறித்த பகுதியில் செயற்பட முடியவில்லை. அதனால் அந்தப் பிரதேசம் கழிவுகளாலும், பற்றைகளினாலும் மக்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டுக் காணப்பட்டது.

இதனையடுத்து சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் காட்டமான கண்டனங்கள் அண்மைய நாட்களாக வெளியிடப்பட்டன.இதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் , சபை உறுப்பினரும் குழுத்தலைவருமான அ.கமலறேகன், பணியாளர்கள், பிரதேச மக்கள் இணைந்து குறித்த பகுதியை நேற்று(7.1.2026) துப்புரவு செய்துள்ளது.

சபையின் சொத்தாக உடைவடைந்த நிலையில் உள்ள இருக்கைகள், நுழைவாயில் கதவு போன்றன திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.பெயர்ப் பலகையிடப்பட்டுள்ளதுடன் பொலித்தீன் தடை மற்றும் சுத்தத்தினைப் பேணுவதற்கான விளம்பர பலகைகளும் பிரதேச சபையினால் வைக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

59 0 0
இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

75 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

77 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

67 0 0