உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

திருகோணமலையில் தீவிரமடையும் கடல் அரிப்பு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
62 பார்வைகள்

திருகோணமலை, வீரநகர் பகுதியில் நிலவும் கடும் கடல் அரிப்பு காரணமாக கடற்றொழிலாளர்களின் வாடிகள் மற்றும் குடியிருப்புக்கள் பாரிய பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.
இன்றைய (08) நிலவரப்படி நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள இந்த நிலைமை குறித்து வீரநகர் அன்னை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் வி. மனோகரன் கருத்துத் தெரிவிக்கையில், “சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாறானதொரு மோசமான கடல் அரிப்பை நாங்கள் எதிர்கொள்கிறோம்.

எமது கடற்றொழிலாளர் வாடிகள் பல அழிந்துவிட்டன, 4 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. கடற்றொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்ட இப்பகுதி மக்கள், கடல் கொந்தளிப்பால் தொழிலுக்குச் செல்ல முடியாமலும், வசிக்கஇடமில்லாமலும் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிடச் சென்ற கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுந்தரமூர்த்தி திபராஜ், கடல் அரிப்பைத் தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

59 0 0
இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

75 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

77 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

67 0 0