உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கணக்காய்வாளர் நாயகம் இன்றி நிதி அராஜகம்: சர்வதேசம் வரை செல்லும் எதிர்க்கட்சி.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
48 பார்வைகள்

நாட்டில் கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிக்காமல் அரசாங்கம் காலந்தாழ்த்தி வருவதன் மூலம் நாடு பல துறைகளில் அராஜக நிலையை நோக்கிச் சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.இன்று (08) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஒரு வருட காலமாக பதில் கணக்காய்வாளர் நாயகம் ஒருவர் கடமையாற்றி வந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக பதில் அதிகாரி கூட இன்றி கணக்காய்வு திணைக்களம் இயங்கி வருகிறது.

ஒரு நாடு ஒரு மாத காலம் கணக்காய்வாளர் நாயகம் இன்றி இயங்குவது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். தகுதியுள்ள அதிகாரிகள் இருக்கும் போதுஇ அவர்களின் பெயர்களைப் பரிந்துரைக்க ஜனாதிபதி தயக்கம் காட்டி வருகிறார்.இன்று (08) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஒரு வருட காலமாக பதில் கணக்காய்வாளர் நாயகம் ஒருவர் கடமையாற்றி வந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக பதில் அதிகாரி கூட இன்றி கணக்காய்வு திணைக்களம் இயங்கி வருகிறது.ஒரு நாடு ஒரு மாத காலம் கணக்காய்வாளர் நாயகம் இன்றி இயங்குவது மிகவும் பாரதூரமான நிலைமையாகும்.

தகுதியுள்ள அதிகாரிகள் இருக்கும் போதுஇ அவர்களின் பெயர்களைப் பரிந்துரைக்க ஜனாதிபதி தயக்கம் காட்டி வருகிறார்.பதில் கணக்காய்வாளர் நாயகமாக இருந்த தர்மப்பிரிய கம்மன்பில அனைத்து தகுதிகளையும் கொண்டிருந்தும், அவரது பெயரைப் பரிந்துரைக்காமல் தகுதி குறைந்தவர்களின் பெயர்களையே ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ளார்.

இதன் காரணமாகவே அரசியலமைப்பு பேரவை அந்தப் பெயர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.கணக்காய்வாளர் நாயகம் இல்லாததால் நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு உள்ளிட்ட பல குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த தணிக்கை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

முறையான அதிகாரியை நியமிக்கத் தவறியமை குறித்து சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்குத் தெரியப்படுத்த எதிர்க்கட்சிகள் இணைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளன.நாட்டின் நிதி ஒழுக்கத்தைப் பேணவும் அராஜக நிலையைத் தவிர்க்கவும் தகுதியான ஒருவரை உடனடியாக கணக்காய்வாளர் நாயகமாக ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

59 0 0
இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

75 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

77 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

67 0 0