உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நுவரெலியா கிரகரி வாவியில் விபத்துக்குள்ளான விமானத்தை மீட்கும் தீவிர முயற்சிகள் தோல்வி.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
39 பார்வைகள்

நுவரெலியா, கிரகரி வாவியில் சிறிய ரக வானூர்தி ஒன்று நேற்று பிற்பகல் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியது.தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த சிறிய ரக வானூர்தி நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக வந்தபோதே விமானம் விபத்துக்குள்ளானது.

குறித்த விமானத்தை மீட்க இன்று காலை முதல் மாலை வரையில் அதிகாரிகளும் ஊழியர்களும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது தோல்வியடைந்துள்ளது.குறித்த விமானத்தை மீட்பது கடினம் என்பதால், விமானத்தை மீட்க தொழில்முறை விமான இயக்குநர் (மாஸ்டர் டைவர்ஸ்) சேவைகளைப் பெறுவோம் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கேப்டன் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அதிகாரிகள், நுவரெலியா பொலிஸ் உயிர்காப்பாளர்கள், விமானப்படை அதிகாரிகள் மற்றும் கிரகரி வாவி படகு சவாரி வீரர்கள் ஆகியோர் இணைந்து வாவியில் விபத்திற்குள்ளான விமானத்தை மீட்க போராடினர்.

நுவரெலியாவில் தற்போது நிலவி வரும் பனி மற்றும் ஈரப்பதம் கூடிய மோசமான வானிலை காணப்பட்ட போதிலும் சிறிய ரக வானூர்தியை மீட்க பல்வேறு சந்தர்ப்பங்களில் முயன்றனர் இருந்தும் மீட்பு முயற்சிகள் பாதிக்கப்பட்டு உள்ளன விபத்தில் விமானமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

கிரகரி வாவியில் சேறும் சகதியும் நிறைந்து காணப்படுகின்றன இதனால் அந்த பகுதியில் மீட்பு பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது விமானம் விபத்திற்குள்ளானதற்கான உரிய காரணம் உடனடியாக தெரிய வரவில்லை இதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது விபத்திற்குள்ளானமை தொடர்பான விசாரணைக்கு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது .

இந்த விபத்தில் அதிலிருந்த இரண்டு விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர் அவர்கள் சிகிச்சைக்குப் பிறகு இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

60 0 0
இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

75 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

77 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

67 0 0