உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழ் தொழில் நுட்பக் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடம் வாட்ஸாப்பில் பணம் சேகரிப்பு!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
38 பார்வைகள்

யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரியில் ICT பாடநெறிக்கான Viva பரீட்சைக்கு வருகின்ற மதிப்பீட்டு உத்தியோகத்தர்களுக்கான (உணவு, தங்குமிடம்.போக்குவரத்து) அனைததுக்கும் என பரீட்சை எழுதும் மாணவர்களிடம் வாட்ஸாப்பில் பணம் சேகரிக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த தொழில்நுட்பக் கல்லூரியில் எதிர்வரும் 12- 13-ம் திகதிகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்துக்கான வாய்மொழி மூல பரீட்சைகள் இடம்பெற உள்ளன.இதற்காக கொழும்பிலிருந்து வருகைதரும் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வழங்குவதற்காக குறித்த நிதி சேகரிப்பு விரிவுரையாளர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் இடம்பெறுவதாக மாணவர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 

பரீட்சை நடாத்துவதற்கு வரும் உத்தியோத்தர்களுக்கு அரசாங்கம் தங்குமிடம் போக்குவரத்து என்பவற்றை வழங்குகின்ற போதும் மாணவர்களிடம் பணத்தை கேட்பது எவ்விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினர்.

குறித்த விடயம் தொடர்பில் தொழில் நுட்பக் கல்லூரியில் பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது இவ்வாறான விடயம் ஒன்று whatsapp ஊடாக இடம்பெறுவதாக தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும் மாணவர்கள் வரும் நிதி வழங்க வேண்டிய தேவை இல்லை என அறிவுறுத்தல் வழங்கியதாக தெரிவித்தார்.குறித்த விடயம் தொடர்பில் பிரதமரும் உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமர சூரியாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது .

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

60 0 0
இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

75 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

77 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

67 0 0