உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிள்ளையான் – டக்ளஸ் அடுத்தது கருணாவா! அரியநேத்திரன் அம்பலப்படுத்திய உண்மைகள்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
70 பார்வைகள்

இலங்கையின் முன்னாள் ஆயுதக்குழுக்கள் தொடர்பான பழைய குற்றச்சாட்டுகள் மீண்டும் பொதுவெளியில் விவாதமாகி வரும் நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா . அரியநேத்திரன் ஐபிசி தமிழின் அக்கினிப்பார்வை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியிட்ட பகிரங்க வாக்குமூலம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“என்னுடைய தம்பி உட்பட பலரை கடத்தி, நீண்ட காலம் சட்டவிரோதமாக வைத்திருந்தார்கள்” எனக் கூறியுள்ளார்.இந்தக் குற்றச்சாட்டுகள், கடந்த காலத்தில் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் செயல்பட்ட முன்னாள் ஆயுதக்குழுக்கள் இந்த நாட்டையும் தமிழ்மக்களையும் ஆட்டிப்படைத்த அந்த நிகழ்வுகளை ஞாபகப்படுத்தியதுடன் 1990-களின் இறுதி மற்றும் 2000-களின் ஆரம்ப காலங்களில், கடத்தல், காணாமல் ஆக்கல், சட்டவிரோத தடுப்பு போன்ற குற்றச்சாட்டுகள் பல பதிவாகியிருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை முழுமையான விசாரணை இன்றி நிறுத்தப்பட்டதாகவும் அரியநேத்திரன் பகிரங்கமான குற்றச்சாட்டை விடுத்துள்ளார்.

பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா தொடர்பான விவகாரங்கள் மீண்டும் பேசப்படும் சூழலில் வெளியாகியுள்ளதால், இந்த குற்றச்சாட்டுக்கள் “அடுத்ததாக கருணா தொடர்பான குற்றச்சாட்டுகளும் விசாரணைக்கு வருமா?” என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

60 0 0
இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

75 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

77 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

67 0 0