உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
50 பார்வைகள்

இருவேறு இடங்களில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மாவனெல்லை பிரதேசத்தில் கொழும்பு – கண்டி பிரதான வீதியில், கொந்தெனிய சந்திக்கு அருகில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேகாலையில் இருந்து மாவனெல்லை நோக்கிப் பயணித்த வான் ஒன்று, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்த் திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பெருந்துதான் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் வான் சாரதி, அவரது மனைவி மற்றும் பேருந்து சாரதி ஆகியோர் காயமடைந்து, மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், வான் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கடுகன்னாவை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கொழும்பு – தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேஸ்லைன் வீதியின் கீழ் தெமட்டகொடை மேம்பாலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெமட்டகொடை சந்தியிலிருந்து இங்கம் சந்தி நோக்கிப் பயணித்த கொள்கலன் லொறி ஒன்று பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் உஹன பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

60 0 0
இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

75 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

77 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

67 0 0