உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சட்டவிரோத மதுபானம் அருந்தி 06 பேர் உயிரிழப்பு; பிரதான சந்தேகநபர் கைது.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
20 பார்வைகள்

சட்டவிரோத மதுபானம் அருந்தி 06 பேர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று புதன்கிழமை (07) வென்னப்புவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வென்னப்புவை பகுதியில் கடந்த 6ஆம் திகதி, சட்டவிரோத மதுபானம் அருந்தி 06 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து வென்னப்புவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதற்கமைய, இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை விசாரணை அதிகாரிகள் கைது செய்து நேற்று புதன்கிழமை (07) மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது, இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் காலவத்த, கிழக்கு பண்டிரிபுவ பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சிலாபம் வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனைகளின்படி, மதுஅருந்தியமையால் குறித்த நபர்களில் ஐவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மற்றுமொருவரின் பிரேத பரிசோதனை இன்று வியாழக்கிழமை(08) சிலாபம் வைத்தியசாலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத மது அருந்தியதால் சுகவீனமடைந்த மேலும் 08 பேர் நீர்கொழும்பு மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வென்னப்புவை பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0