உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கல்வி அமைச்சர் பதவி துறந்து செல்லும் வரை கல்வி அமைச்சை முற்றுகையிட்டிருக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
21 பார்வைகள்

“நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பித்தால் மாத்திரம் போதாது. பதவியைத் துறந்து வெளியேறும் வரை கல்வி அமைச்சை சுற்றிவளைத்திருக்க வேண்டும். மாணவர்களின் கல்வியுடன் விளையாடுவதற்கு மீண்டுமொருமுறை எவருக்கும் இடமளிக்கக் கூடாது.” – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைக் கூறிய அவர், மேலும் குறிப்பிடுகையில்,

“நாட்டில் கல்விச் மறுசீரமைப்பை மேற்கொள்வதென்பது விளையாட்டல்ல. இது மிகவும் ஆழமாகக் கலந்துரையாடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விடயமாகும். கல்வி மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படுவது எமது பிரச்சினையல்ல.

ஆனால் அவை நாட்டுக்குப் பொறுத்தமானவையாக இருக்க வேண்டும். ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கிடைக்கப் பெறும் 200 மில்லியன் டொலர் மீது கொண்டுள்ள ஆசையால் மாணவர்களின் எதிர்காலத்தை பலியாக்குவதற்கு இடமளிக்க முடியாது.

மிகவும் சூட்சுமமாக 6ஆம் தர மாணவர்களுக்கான பாடப் பரப்பில் பொறுத்தமற்ற இணையதளமொன்றின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது மாத்திரமின்றி இந்தப் பாடத் தொகுதியில் சுமார் 150 இற்கும் மேற்பட்ட பிழைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவற்றைத் தயாரிப்பதற்கான ஆலோசகர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டனர்? அவர்களுக்கு எவ்வளவு கொடுப்பனவு வழங்கப்பட்டது? இந்தக் காரணிகளைக் கல்வி அமைச்சு அல்லது அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.

இந்தக் கல்வி மறுசீரமைப்புக்களுக்கு வெளிநாட்டு நிதி உதவிகள் கிடைக்கவில்லை என்று கூறினாலும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவி கிடைக்கின்றது என்பதை நாம் ஏற்கனவே நாட்டுக்கு வெளிப்படுத்தியிருக்கின்றோம். எந்தக் கொள்கையைப் பரப்புவதற்காக இவ்வாறு நிதி உதவியளிக்கப்பட்டது என்பதையும் நாம் குறிப்பிட்டிருக்கின்றோம்.

இந்தச் சிறிய ஒரு தொகைக்காக எதிர்கால சந்ததியினர் பலியாக்கப்படுகின்றனரா? இதற்காகவா தேசிய மக்கள் சக்தி அரசுக்கு மக்கள் ஆணையை வழங்கினர்?

ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனை வழிகாட்டல் நூல்களில் இந்த விடயம் உள்ளடக்கப்படவில்லை. கல்வி நிபுணர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து எழுந்த எதிர்ப்புக்களை உதாசீனப்படுத்தியே இவை பாடப்பரப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பித்தால் மாத்திரம் போதாது.

பதவியைத் துறந்து வெளியேறும் வரை கல்வி அமைச்சைச் சுற்றிவளைத்திருக்க வேண்டும். மாணவர்களின் கல்வியுடன் விளையாடுவதற்கு மீண்டுமொருமுறை எவருக்கும் இடமளிக்கக் கூடாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0