உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கல்வி அமைச்சர் பதவியில் இருந்து ஹரிணி விலகாவிடின் மக்கள் போராட்டம் வெடிக்கும்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
20 பார்வைகள்

கல்வி அமைச்சராகவும் பிரதமராகவும் பதவி வகித்து வரும் ஹரிணி அமரசூரிய உடனடியாக கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகாவிடின், நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“ஒரே நபர் பிரதமர் பதவியையும் கல்வி அமைச்சர் பதவியையும் ஒரே நேரத்தில் வகிப்பது அரசியல் நெறிமுறைகளுக்கும் நிர்வாக ஒழுங்குக்கும் முரணானது.

குறிப்பாக, கல்வித்துறை தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அதற்கான முழுக் கவனமும் பொறுப்பும் அவசியமாகும்.

கல்வி துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகள், ஆசிரியர் நியமனங்கள், பல்கலைக்கழக நிர்வாக விவகாரங்கள் மற்றும் மாணவர்களைப் பாதிக்கும் கொள்கை முடிவுகள் தொடர்பில் அரசின் செயற்பாடுகள் மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கி வருகின்றது.

இந்த நிலை தொடருமானால், மக்கள் தங்களது அதிருப்தியை வீதியில் வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

அரசு மக்களின் குரலைக் கேட்காவிட்டால், மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லாமல் போவார்கள். அதற்கான முழுப் பொறுப்பும் அரசின் மீதே இருக்கும்.

கல்வி அமைச்சுப் பொறுப்பை முழுமையாகக் கவனிக்கக்கூடிய தனி அமைச்சரை நியமிப்பதே தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற தீர்வாக இருக்கும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0